லியோ படத்தை காண உற்சாகத்துடன் வந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர்- விஜயை நேரில் பார்க்க வேண்டும் என கோரிக்கை...

published 1 year ago

லியோ படத்தை காண உற்சாகத்துடன் வந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர்- விஜயை நேரில் பார்க்க வேண்டும் என கோரிக்கை...

கோவை: லியோ படத்தை காண உற்சாகத்துடன் வந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

விஜய் நடிப்பில் இன்று லியோ திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகம் எங்கும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டது. அடுத்த காட்சி 12:30  மணியளவில் கோவை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை காண்பதற்கும் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து  லியோ லியோ என உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இக்காட்சியை காண்பதற்கு அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மருதாச்சலம் என்ற மாற்றுத்திறனாளி ரசிகர் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்கிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில் வந்திருந்தார்.

அப்போது அவரும் அவருடன் வந்த நண்பரும் கூறுகையில், லியோ திரைப்படத்தின் முதல் அப்பேட் வந்ததிலிருந்து சுமார் ஒரு வருட  காலமாகவே இப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு டிக்கெட் இலவசமாகவே வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.  விஜயை நேரில் காண வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள் தங்களை தொலைக்காட்சி வாயிலாக விஜய் பார்த்தால் கண்டிப்பாக தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe