ஆவின் ஊழியர்களின் போனஸ் குறித்து பால்வளத்துறை அமைச்சர் என்ன கூறினார் பாருங்கள்!

published 1 year ago

ஆவின் ஊழியர்களின் போனஸ் குறித்து பால்வளத்துறை அமைச்சர் என்ன கூறினார் பாருங்கள்!

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாட்டில் பால் வளத்தை பெருக்குவதற்கும் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இதில் பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் கூறினார். கால்நடைகளுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது, கடன் வசதிகள் செய்வது, மானியங்களை பெற்று தருவது போன்றவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இத்துறை சார்ந்த செயல்பாடுகளை அதிகரித்து வருவதாக கூறிய அமைச்சர் அதன்படி குறுகிய காலத் திட்டமாக இரண்டரை லட்சம் கரவை மாடுகளுக்கு கடன் வழங்குவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதேபோல் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாலின் தரத்திற்கு ஏற்ற விலை என்பதையும் படிப்படியாக நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் பாலுக்கு ஒரு குறைந்தபட்ச விலை தான் வழங்கப்பட்டு வந்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது அதனை மாற்றி தரத்திற்கு ஏற்ப விலை என்கின்ற நிலையை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் 10 நாட்களுக்கு ஒரு முறை பாலுக்கான பணம் பட்டுவாடா செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஆவினில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களுடைய திறன் மேம்பாட்டு பயிற்சியை கோவை மாவட்டத்திற்கு தொடங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆவின் சப்ளையில் பற்றாக்குறை ஏற்படுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அது ஒரு அப்பட்டமான பொய்யான தகவல் என கூறிய அவர் பாலின் சப்ளையினை குறைக்கவில்லை எனவும் தட்டுப்பாடு இன்றி எவ்வளவு கேட்டாலும் வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் வியாபாரம் பெருகியுள்ளதாகவும் ஏதோ ஒரு குறிப்பிட்ட தரத்தில் உள்ளது கிடைக்கவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு முழுவதுமாக பால் சப்ளை இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என கூறினார். DIC, தாட்கோ உட்பட பல்வேறு விதத்தில் மானியத்துடன் கூடிய கடனை தொழில் முனைய விருப்பமாக உள்ள இளைஞர்களுக்கு சிறு சிறு மாட்டுப் பண்ணைகள் வைப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அவர்களுக்கு கடனுதவி மற்றும் அவர்களுக்கான பயிற்சி சந்தைப்படுத்துதல் போன்றவற்றையெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்கின்ற பணிகளை ஆவின் அலுவலர்கள் மூலமாக செய்து வருவதாகவும் கூறினார். பால் பாக்கெட் களின் தரங்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நான் பொறுப்பேற்ற thickness யை அதிகப்படுத்தி உள்ளதாகவும், 20கிலோ ரோல்கள் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது 40கிலோ ரோல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே பால் லீக்கேஜ் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதனை பூஜ்ஜிய அளவிற்கு கொண்டு வருவோம் என கூறினார். ஆவின் பாலகங்களில்(ஆவின் டீ கடைகள்) வெளிபொருட்கள் விற்பனை செய்தால் தங்களுக்கு தெரிவிக்கலாம் எனவும் அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் எம்ஆர்பி விலைக்கு தான் ஆவின் பால்கள் விற்கப்படவேண்டும் என கூறிய அவர், சில இடங்களில் ரீடெய்லர்கள் சில இடங்களில் தவறு செய்வதாக புகார்கள் வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கான கடமை தங்களுக்கும் உள்ளது எனவும் யாரேனும் ஆவினுடடைய பதிவு பெற்ற FRO வாக இருந்து கொண்டு விலையை கூட்டி விற்பனை செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேசமயம் பொருள்களை வாங்குபவர்களும் எம்ஆர்பி யை விட கூடுதலாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால் அவர்களே கேள்வி எழுப்பலாம் என்றார்.

இத்துறையில் மருத்துவர்களின் சேவையை இன்னும் எப்படி அதிகரிக்க முடியும் என விவாதிக்கப்பட்டதாகவும் கோவை மாவட்டத்தை பொருத்தவரை 96 மருத்துவர்கள் இருக்கின்றனர் எனவும் கால்நடை மையங்களில் உள்ள சேவைகளையும் தாங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

இத்துறையில்  இருந்த பல்வேறு நடைமுறை சிக்கல்களை சரி செய்துள்ளதாகவும், கொரோனா வந்த காலத்தில் இரண்டு ஆண்டுகளில் கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு இடர்பாடுகள் வந்ததாகவும், இதனால் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்தார். இதனை ஒரே நாளில் சரி செய்ய முடியாது எனவும் இனி வரும் காலங்களில் இந்த நிலைமை மாறும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து கால்நடைகளுக்கான முகாம்களை நடத்த திட்டமிட்டு தொடர்ச்சியாக நடத்தி வருவதாகவும் தொடர்ச்சியாக கடன்களையும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அரசாங்கத்திடமும் இத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். முன்பெல்லாம் பால் மட்டுமே தேவைப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பால் உற்பத்தி பொருட்களும் அதிகளவு விற்பனை நடைபெறுவதால் அதற்கு தகுந்த பால் தேவையும் உள்ளது என கூறினார். தற்பொழுது தங்களுடைய விற்பனை எட்டு சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாரத்தை சேமித்துள்ளதாக தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டை விட தற்பொழுது 20 சதவிகிதம் கூடுதல் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், இன்னும் அது கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல் அதன் தரத்தையும் தற்போது உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஆவின் ஊழியர்களுக்கு போனஸ் தொகை குறித்தான கேள்விக்கு ஒரே விதமாக 38 செய்துள்ளதாகவும், நீ அரசு கூறியுள்ள 42 காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களின்படி யாரும் பாலை வாங்கி விற்பதற்கு அனுமதி இல்லை எனவும்  தனியார் நிறுவனங்கள் மீது சில புகார்கள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய ஊழியர்கள் தயாராக இருந்தால் ரேஷன் கடைகளுக்கும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய தரலாம் என்றார். கிராமப்புறங்களில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்கு தொழில் முனைவோர்கள் அதற்கான முன்னுரிமைகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, ஆவின் பொது மேலாளர் பால பூபதி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்  வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe