அந்தோணியார் ஆலய 15 ஆடம்பர தேர்களின் பவனி விழா: மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

published 2 years ago

அந்தோணியார் ஆலய 15 ஆடம்பர தேர்களின் பவனி விழா: மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி விழாவில் 15தேர்கள் வண்ண விளக்குகளுடன்  திருவீதி உலா வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடமாக கொரோனா ஊரடங்கால் தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றி தேர் திருவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நாட்கள் தொடங்கியது. தொடர்ந்து இன்றோடு ஏழு நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


இதைத்தொடர்ந்து ஆடம்பர தேர் திருவிழா பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியில் அந்தோணியார் தேர்,சூசையப்பர் தேர், சகாய மாதா தேர், பனிமய மாதா தேர், அன்னை தெரசா தேர், மிக்கேல் அதிதூதர் தேர்,இருதய ஆண்டவர் தேர்,பூண்டி மாதா தேர், செபமாலை மாதா தேர், பெரியநாயகி மாதா தேர், வேளாங்கண்ணி மாதா தேர்,குழந்தை இயேசு தேர், செபஸ்தியார் தேர், புனித தெரசா தேர்,காணிக்கை மாதா தேர் என 15 தேர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பவனி ஆனது புனித அந்தோணியார் தேவாலய நுழைவாயிலில் இருந்து தொடங்கி  ரெட் ஃபீல்ட்ஸ் ரோடு வழியாக வந்து, ராமநாதபுரம் காவல் நிலையம் பின்புறம் சென்று மீண்டும் அந்தோணியார் கோயிலை அடைந்தது. இந்த பவானியில் மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe