கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்..

published 2 years ago

கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்..

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

Sponsored

கோவை: இளங்கலை படிப்புகளுக்கு வரும், 27 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று
கோவை அரசு கலைக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை அரசு கலைக் கல்லுாரியில், 23 இளங்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. வரும், 2022–23 ம் கல்வியாண்டுக்கான, 1,433 இடங்களுக்கான சேர்க்கை விரைவில் நடக்க உள்ளது. 
இதற்காக மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக வரும், 27 ம் தேதி முதல், ஜூலை, 15 ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக விற்பனை செய்யப்படாது. பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, பிளஸ்2 முடிவுகள் வெளிவந்த நிலையில், விண்ணப்பங்கள் பெற மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லுாரிக்கு வரத்தேவையில்லை என, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்களின் வசதிக்காக வரும், 27 ம் தேதி முதல் கல்லுாரியில் தகவல் மையம் செயல்படும் என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள், பெற்றோர் கல்லுாரிக்கு வருவதை தவிர்க்கவும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe