கமலஹாசனை மருத்துவ முத்தத்தால் வரைந்த கோவை கலைஞன்

published 1 year ago

கமலஹாசனை மருத்துவ முத்தத்தால் வரைந்த கோவை கலைஞன்

கோவையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் தனது உதடுகளில் வர்ணங்களை பூசி நடிகர் கமலஹாசனின் முகத்தை முத்தத்தாலேயே வரைந்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யு.எம்.டி ராஜா. தங்க நகை வடிவமைப்பாளரான இவர் அவ்வப்போது பல்வேறு கலைப்பொருட்களையும், சாதனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே, கிணற்று நீரில் மிதப்பது, கண்களை கட்டிக்கொண்டு வாகனத்தை ஓட்டுவது உள்ளிட்ட சாதனை முயற்சிகளை மேற்கொண்டார்.

மேலும், சந்திரயான் விண்கலம் ஏவப்பட்டபோது சிறிய அளவிலான விண்கலத்தை தயாரித்தார். மேலும், விநாயகர் உருவச்சிலை நிலவை தாங்கிப்பிடிப்பது போன்ற உருவத்தையும் தயாரித்தார். சீதா பழத்தில் சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவம், பல்புக்குள் ஓவியம், வெள்ளி மற்றும் தங்கம் கொண்டு நுண்ணிய பொருட்களை உருவாக்குதல் போன்ற கலைப் பணிகளையும் செய்து வருகிறார்.

இதனிடையே தற்போது  நடிகர் கமலஹாசனின் ரசிகரான யு.எம்.டி ரஜா முத்தங்களால் கமலின் உருவத்தைத் தீட்டியுள்ளார். லிப்ஸ்டிக்கை தனது உதடுகளில் பூசி வெள்ளை நிற காகிதத்தில் முத்தம் கொடுத்தவாறே  நடிகர் கமலஹாசனின் முகத்தை வரைந்துள்ளார். சுமார் 8 மணி நேரம் செலவழித்து இதனை உருவாக்கி இருப்பதாகவும், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இதனை அளிக்க விரும்புவதாகவும் யு.எம்.டி ராஜா தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe