கோவை மகளிர் ஐடிஐயில் 1991 முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் 30ஆம் தேதிக்குள் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்...

published 1 year ago

கோவை மகளிர் ஐடிஐயில் 1991 முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் 30ஆம் தேதிக்குள் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்...

கோவை: கோவை மகளிர் ஐடிஐயில் 1991 முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் சான்றிதழ் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர் ஐடிஐ யில் 1991 சேர்க்கை முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் தொழிற்தேர்வு சான்றிதழ்கள் பயிற்சியாளர்களால் பெறப்படாமல் உள்ளன.

எனவே, பயிற்சியாளர்கள் தங்களது தற்காலிக தேசிய தொழிற் சான்றிதழ் (PNTC), தேசிய தொழிற்சான்றிதழ் (NTC), COL (BBBT)Advanced Module சான்றிதழ் BCC சான்றிதழ், ICT Academy சான்றிதழ், SCVT சான்றிதழ், MES, TNSDC குறுகிய காலபயிற்சி சான்றிதழ்களை அடுத்த மாதம் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இச்சான்றிதழ்கள் நீண்டகாலமாக பெறப்படாமல் உள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை பெற்று செல்லவில்லையெனில் அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் சென்னையில் உள்ள அரசு ஆவணகாப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெற்றுச் செல்லும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தொழிற்சான்றிதழ்கள் பெற வரும் பயிற்சியாளர்கள், இங்கு பயிற்சி பெற்றமைக்கு ஆதரமாக கட்டணம் செலுத்திய இரசீதோ, நுழைவுசீட்டோ, அடையாள அட்டையோ அல்லது தற்காலிக தொழிற் சான்றிதழையோ
தவறாமல் எடுத்து கொண்டு வேலைநாட்களில் (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) வரும்படி தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கூடுதல்விபரங்களுக்கு 0422 2965533, 2965534 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe