ஓபன் எண்ட் ஸ்பின்னிங் வேலை நிறுத்த போராட்டம்.. ஓஸ்மா அறிவிப்பு

published 1 year ago

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் வேலை நிறுத்த போராட்டம்.. ஓஸ்மா அறிவிப்பு

கோவை: கழிவு பஞ்சு விலை ஏற்றம் மற்றும் குறைந்த நூல் விலை போன்ற காரணங்களால் OE மில்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபன் எண்ட் ஸ்பினிங் மில்ஸ் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர்30-ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கழிவுபஞ்சு பஞ்சாலை மில்கள் இயங்கி வருகிறது.சுமார் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ நூல்கள் ஸ்பின்னிங் மில் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. 15 லட்சம் கலர் நூல்கள் பிளாஸ்டிக் பெட் பாட்டில் பைபர் மற்றும் கார்மென்ட் கம்பெனி பனியன் கட்டிங் வேஸ்ட் இல் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. OE மில்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும்,ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. OE மில்கள் கடந்த ஒருவருடமாக மின்சார கட்டண உயர்வினால் மிகப்பெரிய நெருக்கடியில் இருப்பதாக OE சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  

உற்பத்தி நிறுத்தம் குறித்து ஓஸ்மா தலைவர் அருள்மொழி கூறுகையில்,

மூலப்பொருள் வரலாறு காண விலையில் விற்பதினால் 20 வருட காலமாக இருந்த காட்டன் விலை 60% இருந்து 80% உயர்ந்துள்ளதால் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இனிவரும் காலங்களில் பஞ்சு விலை குறைந்தால் மட்டுமே OE மில்கள் தொடர்ந்து இயக்க முடியும். தமிழ்நாடு அரசு கடந்த வருடம் மின்சாரகட்டணம் உயர்த்தியதால் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளதாகவும் இதனால் மாதம் 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்துவதால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஒரு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்தால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் OE மில்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

OE மில்களின் தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்:-

தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். காட்டன் வேஸ்ட் மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு கழிவு பஞ்சு ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும். மகாராஷ்டிரா,குஜராத்,ஹரியானா பீகார்,பஞ்சாப் மாநிலங்களில் 50% மானியம்வழங்கி வருவது போல் தமிழகஅரசும் உற்பத்தி இருக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி புதியஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தினார். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி OE மில்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வரும் நவம்பர் 7-ம்தேதி முதல் நவம்பர் 30-ம்தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe