'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா? தேவையா இல்லையா? கோவை மக்கள் கருத்து..!

published 1 year ago

'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா? தேவையா இல்லையா? கோவை மக்கள் கருத்து..!

கோவை: ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சார சீரழிவு கிடையாது, ஒவ்வொருவருக்கும் ஆடை சுதந்திரம் உள்ளது. நாம் அதில் தலையிட உரிமை இல்லை என்று கோவை இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை  நாட்களில் ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் துறையினர் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இதில், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

இதனிடையே ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு என்றும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் சாலைகள் நடனமாடுவது மன வேதனை அளிப்பதாகவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்திருந்தார். இவரது கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. இதனிடையே ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா? இல்லையா? என்பது குறித்து கோவை இளைஞர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு இளைஞர்கள் கூறியதாவது:

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திருக்கும் இடமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவருக்கு பிடித்த ஆடைகளை அணிவதற்கும், மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கும் உரிமை உள்ளது. நாம் அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதற்கு உரிமை இல்லை. இது மாடர்ன் யுகம். நாங்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிகிறோம். பல்வேறு திரைப்படங்கள் வருகிறது. அதில் வரும் நடிகைகள் புடவை கட்டிக் கொண்டு மட்டும் தான் நடிக்கிறார்களா? ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகள் எங்களுக்கு தேவைப்படும் ஒன்று.

இவ்வாறு இளைஞர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe