கோவையில் சைக்கிள்களுக்கு ஒளிரும் பட்டைகளை ஒட்டிய போலீசார்…

published 1 year ago

கோவையில் சைக்கிள்களுக்கு ஒளிரும் பட்டைகளை ஒட்டிய போலீசார்…

கோவை: போக்குவரத்து போலீஸ் சார்பில் சைக்கிளில் சென்றவர்களுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகளை, சைக்கிளை சுற்றிலும் ஒட்டி பாதுகாப்பாக செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை சிங்காநல்லுார் எஸ்.ஐ.எஸ்.எச்., காலனியை சேர்ந்தவர் சிதம்பரம், 75. இவர் கடந்த, 3ம் தேதி அதிகாலை சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகில் உள்ள யு டேர்னில் திரும்பும் போது, அந்த வழியாக வந்த லாரி, அவர் மீது மோதியது.

அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை நேரத்தில் அவர் ஓட்டிச் சென்ற சைக்கிளில், இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படாததே விபத்திற்கான காரணம் என விசாரணையில் தெரிந்தது. இந்த விபத்தை தொடர்ந்து கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு படி, போக்குவரத்து துணை கமிஷனர் ராஜராஜன் மேற்பார்வையில், மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், அனைத்து போலீஸ் எல்லைக்குட்ட பகுதியிகளிலும், சைக்கிளை ஓட்டிச் சென்றவர்களுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகள், சைக்கிளை சுற்றிலும் ஒட்டப்பட்டு பாதுகாப்பாக செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இரவு நேரங்களில் சைக்கிள்களில் செல்வோர் கண்டிப்பாக சைக்கிளின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில், இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகளை பொருத்திக் கொண்டு செல்ல வேண்டும் என கோவை மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe