சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அரியவகை பாம்பு, ஆமை குஞ்சுகள்…

published 1 year ago

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அரியவகை பாம்பு, ஆமை குஞ்சுகள்…

கோவை: சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்பு, ஆமைகள், சிலந்தி உள்ளிட்ட வெளிநாட்டு உயிரினங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
.இந்நிலையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானம் வந்தது. விமான நிலையத்தில் இறங்கிய பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுப்பினர். அதன் பின்பு பயணிகளை சோதனை செய்யும் இடம் அருகே மூன்று பெட்டிகள் கிடந்தது.

இதனை யாரும் உரிமை கோர வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது பெட்டிகளை தூக்கி வந்த 3 நபர்கள் சோதனைக்கு பயந்து அங்கேயே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வெட்டிகளை சோதனை செய்த பார்த்தபோது அதில் அரிய வகை வெளி நாட்டு உயிரினங்களான பாம்பு, ஆமை, சிலந்தி, ஓணாண் உள்ளிட்ட உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.

அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் 11000 ஆமைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் சிங்கப்பூரிலிருந்து கோவை வந்தவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பெட்டிகளை விட்டு சென்றது டொமினிக், ராமசாமி உட்பட 3 பேர் என் தெரியவந்தது.

போலீசார் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். டொமினிக், ராமசாமி என்ற இருவர் மட்டுமே விசாரணைக்கு வந்தனர். ஒரு நபர் வரவில்லை. இருவரிடமும் அதிகாரிகள் சிங்கப்பூரில் வெளிநாட்டு உயிரினங்களை கொடுத்து அனுப்பியது யார்? இங்கு யாரிடம் ஒப்படைக்க வந்தீர்கள் உள்ளிட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறையினரிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது கடத்திவரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்கள் கோவை தட்பவெப்ப நிலைக்கு தாங்காது எனவும், அவற்றை மீண்டும் சிங்கப்பூருக்கே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் அறிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe