கோவையில் பட்டாசு வெடித்ததாக 66 பேர் மீது வழக்கு

published 1 year ago

கோவையில் பட்டாசு வெடித்ததாக 66 பேர் மீது வழக்கு

கோவை: கோவை மாநகரில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில், காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கின்றனரா? என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிலர் ஆர்வ மிகுதியில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தனர். இதனையடுத்து கோவை மாநகரில் ஆர்.எஸ்.புரம், வெறைட்டிஹால் ரோடு, உக்கடம், வடவள்ளி, காட்டூர், ரேஸ்கோர்ஸ், சாயிபாபா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 66 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது அரசின் உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததால் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாநகர பகுதிகளில் டன் கணக்கில் பட்டாசு கழிவுகள் குவிந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe