கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு…

published 1 year ago

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு…

கோவை: கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு திடீர் ஆய்வுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ கவனிப்பு முறை மற்றும் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் எண்ணிக்கை குறித்தும் மருத்துவமனை முதல்வரிடம் கேட்டிருந்தார்.

பின்னர், மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து செயற்கை அவையவையங்கள் பிரிவு, உணவு கூடம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, விஷ முறிவு மருத்துவம்  ஆகியவற்றில் நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உணவுக் கூட்டத்தில் மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்து உண்டு பரிசோதித்தார்.

மேலும், அங்கு தினசரி வழங்கப்படும் உணவு பட்டியலை பார்வையிட்டார். மண்டல புற்றுநோய் பரிசோதனை மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், ஹீமோபிலியா சிகிச்சை மையத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்  அங்கு தினசரி வருகை தரும் நோயாளி எண்ணிக்கை குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் உடன் வரும் பொது மக்கள் இருக்க போதுமான அளவு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தாய் செய் அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கு வருகை தரும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தரமான சிகிச்சை வாங்குவதுடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் உடனடி வழங்கும் படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினசரி மேற்கொள்ளப்படும் பிரசவங்கள் எண்ணிக்கை குறித்தும், பிற மருத்துவமனைகளிலிருந்து வருகைதரும் பிரசவங்கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.   மேலும் அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும்  கேட்டறிந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe