தாயிடம் இருந்து பிரிந்த புலி.. பயிற்சி கொடுக்கும் வனத்துறை.. புலி முயலை கவ்வி செல்லும் வீடியோ காட்சி..

published 2 years ago

தாயிடம் இருந்து பிரிந்த புலி..  பயிற்சி கொடுக்கும் வனத்துறை..  புலி முயலை கவ்வி செல்லும் வீடியோ காட்சி..

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி முயலை கவ்வி செல்லும் காட்சியியை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகஉட்பட்ட முத்து முடி பகுதியில் 8 மாத குட்டியாக பிடிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் அது உள்ளது. தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தனி கூண்டு அமைக்கப்பட்டு கடந்த 9 மாதங்களாக வனத் துறையினர் பாதுகாத்து வந்தனர். 

இந்நிலையில் அதற்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் கூறினர். தற்போது அப்பகுதியில் ஓடுகின்ற முயலை வாயில் கவ்வி கொண்டு செல்லும் காட்சியை வனத்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் வேட்டையாடும் காட்சி காண்பிக்கப்படவில்லை. புலிக்கு இன்னும் பல மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Video : https://www.youtube.com/watch?v=9b3yEIlspZE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe