ஓட்டுநர் / நடத்துனர்கள் நேரடி ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு மையத்திற்கு பேருந்து வசதி...

published 1 year ago

ஓட்டுநர் / நடத்துனர்கள் நேரடி ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு மையத்திற்கு பேருந்து வசதி...

கோவை: ஓட்டுநர் / நடத்துனர்கள் நேரடி ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு மையத்திற்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என  மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டம் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் ஓட்டுநர் ! நடத்துனர்கள் நேரடி ஆள் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு SETC 2023 வரும் 19.11.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற உள்ளது.

19.11.2023 அன்று காலை 07.30 முதல் 10.00 மணி வரை மற்றும் மதியம் 12.30 முதல் 02.30 மணி வரையிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு

1. காந்திபுரத்திலிருந்து பேருந்து வழித்தட எண். 70 (காந்திபுரத்திலிருந்து சாய்பாபா காலனி வழியாக கல்லூரி செல்லும்)

2.இரயில் நிலையத்திலிருந்து பேருந்து வழித்தட எண். 1C, 11 ரயில்நிலையம், சாய்பாபா காலனி வழியாக கணுவாய் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேர்வாளர்களின் தேவைக்கேற்ப மேற்கண்ட நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe