கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா - நீர்வரத்து குறைந்ததால் நாளை முதல் மீண்டும் திறப்பு - வனத்துறை அறிவிப்பு...

published 1 year ago

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா -  நீர்வரத்து குறைந்ததால்  நாளை  முதல் மீண்டும் திறப்பு - வனத்துறை அறிவிப்பு...

கோவை: கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.  தற்பொழுது நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் திறக்கப்படுவதாக  வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால்  நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். 
நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியது இதனால் மீண்டும் நாளை முதல் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe