பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் இந்தியா முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்…

published 1 year ago

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் இந்தியா முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டம்…

கோவை: SRMU சேலம் கோட்டம் கோவை தலைமை கிளையில் பழைய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டி பொது வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் இந்தியா முழுவதும் SRMU சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே மத்திய அரசிடம் பல்வேறு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகு பொது வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை இயற்றி தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்த்து அகில இந்திய அளவில் பல்வேறு போராட்டங்கள்,தர்ணாகள், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நடைபெற்ற பேரணிக்கு பிறகு எந்த விதமான அறிவிப்பையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு போராட்டக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் நவம்பர் 21,22 மற்றும் 23 தேதிகளில் காலவரயற்ற வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe