குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது - தமிழக அரசை கண்டித்து விவசாய சங்க போரட்டக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது - தமிழக அரசை கண்டித்து விவசாய சங்க போரட்டக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்...

கோவை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக அப்பகுதியில் உள்ள 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழக முழுவதும் விவசாயிகளை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போரட்டக்குழுவினர் தமிழக அரசை கண்டித்து அச்சங்கத்தின் மாநில செயலாளர் மருத்துவர் தங்கராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், கைது செய்த விவசாயிகளை விடுவிக்க  வேண்டுமென தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe