கோவையில் எப்போதெல்லாம் மழை பெய்யும்..? ஜோதிடர்களை மிஞ்சும் வகையில் கணித்துக் கூறிய சந்தோஷ் கிருஷ்ணன்..

published 1 year ago

கோவையில் எப்போதெல்லாம் மழை பெய்யும்..? ஜோதிடர்களை மிஞ்சும் வகையில் கணித்துக் கூறிய சந்தோஷ் கிருஷ்ணன்..

கோவை: கோவையில் இந்த வாரம் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்று கோயம்புத்தூர் வெதர்மேன் என்று அழைக்கப்படக்கூடிய சந்தோஷ் கிருஷ்ணன் கணித்துக் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் முடிய வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டம் பயனடைகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும் விவசாயிகளும், பொதுமக்களும் அதற்கேற்ப தயாராகும் படியும் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு குறைந்தது. இதேபோல் மார்ச் தொடங்கி மே மாதம் வரை இருக்கும் வெப்ப சலன மழையும் குறைந்தது. இதனிடையே தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

ஆண்டுதோறும் 330 மி.மீ என்ற சராசரி அளவில் கோவையில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில் தற்போது வரை 280 மி.மீ மழை பெய்துள்ளது. கோவையின் வடக்கு பகுதிகளில் இந்தாண்டு அதிகமாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதாவது சனிக்கிழமை வரை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு மேல் லேசானது முதல் மிதமான மழைக்கும், இரவு நேரத்தில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே விவசாயிகளும், பொதுமக்களும் அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்துகொள்ளலாம்.

இந்த நேரங்களில் வெளியே செல்பவர்கள் ரெயின் கோட் அணிந்து கொண்டோ அல்லது குடையுடனோ வெளியே சென்றால் பாதுகாப்பானது.

இவ்வாறு சந்தோஷ் கிருஷ்ணன் கூறினார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe