கோவையில் 'யூ டர்ன்' நடைமுறைக்கு பின் ஆம்புலன்ஸ் வேகம் அதிகரிப்பு - காவல் ஆணையர் பேட்டி

published 1 year ago

கோவையில் 'யூ டர்ன்' நடைமுறைக்கு பின் ஆம்புலன்ஸ் வேகம் அதிகரிப்பு - காவல் ஆணையர் பேட்டி

கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவை பசுமை வட்டங்கள் என்ற பெயரில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டார். 

7 நிமிடம் ஒடும் அந்த வீடியோவில் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ரவுண்டானாக்கள் மற்றும் ‘யு டர்ன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

கோவை அவிநாசி ரோட்டில், 25 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம், 23 இடங்களில் யு டர்ன் மற்றும், 7 இடங்களில் ரவுண்டானாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. யு டர்ன் நடைமுறைக்கு பின், அவிநாசி ரோட்டில், வாகனங்கள் நிற்காமல் தொடர்ந்து சென்று வருகிறது.

2022ம் ஆண்டு அவிநாசி ரோட்டில் நடந்த சாலை விபத்துகளில் 12 பாதசாரிகள் உயிரிழந்தனர். ஆனால் 2023-ம் ஆண்டு அவிநாசி ரோட்டில் நடந்த சாலை விபத்தில் ஒரு பாதசாரி இறந்து உள்ளார். கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வருவதற்கான நேரம் 11:24 நிமிடங்களாக இருந்தது. ஆனால் தற்போது அது 7:22 நிமிடமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் அவிநாசி ரோட்டில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அவர் அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி அருகிலும், பீளமேடு அரோமா பேக்கரி அருகிலும் பாதசாரிகள் எளிதில் கடக்க பெலிகன் (பாதசாரிகள்) சிக்னல்களை இரண்டு வாரங்களில் அமைக்க உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe