கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் விமானங்கள் ரத்து பயணிகள் அவதி

published 1 year ago

கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் விமானங்கள் ரத்து பயணிகள் அவதி

கோவை: சென்னையில் கன மழை பெய்து வருவதால் கோவையில் இருந்து சென்னை செல்லும் நான்கு ரயில்கள் மற்றும் ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதைகளை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் பல்வேறு ரயில் சேவைகளும், விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது.

அதன்படி, கோவையிலிருந்து இன்று காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 7:10 மணிக்கு கோவை வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் 6.10க்கு கோவை வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவையிலிருந்து இன்று காலை 6.20 மணிக்கு சென்னை புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்தாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சென்னை புறப்படும் விமான சேவையும் ரத்தாகியுள்ளது. அதன்படி  சென்னையில் இருந்து கோவை வரும் இண்டிகோ விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திடீரென விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் கோவை விமான நிலையத்திற்கும் ரயில் நிலையத்திற்கும் வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe