கோவையில் பெட்ரோல் தட்டுப்பாடு..!

published 2 years ago

கோவையில் பெட்ரோல் தட்டுப்பாடு..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருவது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவை எரிபொருட்கள் தான். மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. 

ஆனால், எரிபொருள் விலை இதுவரை இல்லாத வகையில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரவேண்டும். எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த வாரம்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தின் இயக்கமும் பாதிக்கப்படும். டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் அது நாட்டின் உற்பத்தியையும், அதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறையில் பெட் ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங்குள்ள 2 பங்குகளிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டும் பொட்ரோல் போடப்படுகிறது. கார்களுக்கு ரூ.500 வரை மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe