களமிறங்கும் தேசிய புலனாய்வு துறை- கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம் சூடிபிடிப்பு

published 1 year ago

களமிறங்கும் தேசிய புலனாய்வு துறை- கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரம் சூடிபிடிப்பு

கோவை: கோவை உக்கடம்  பகுதியில் அமைந்துள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் கோயில் முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பு  தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பலர் சிக்குவார்கள் அதிக வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக சென்ற வருடம் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி காரில் குண்டு வெடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான ஜமேஷா முபீன் என்பவர் காருக்குள் இருந்தவாரே உடல் கருகி உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 14 வது நபராக போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் என்பவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர், கார் சர்வீஸ் நிறுவனத்தில் பெயின்டராக வேலை பார்த்து வந்தார்.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபீன், இவரை பலமுறை நேரில் சந்தித்து பேசி இருப்பது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. 

தாஹா நசீரும், ஜமேஷா முபீனும் அப்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்ததும், கார் குண்டுவெடிப்புக்கு முன்பாகவும் இவர்கள்  இருவரும் சந்தித்து கொண்டதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போல ஏற்கனவே கைதான முகமது இத்ரீஸ் என்பவருடனும் ஜமீஷா முபீன் பலமணி நேரம்  பேசி   இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் முகமது இத்ரீஸ், தாஹா நசீர் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும்  புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்துள்ள என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து சென்றனர். 

கோவை என்ஐஏ முகாம் அலுவலகத்திற்கு கொண்டு வந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe