மின் கட்டண உயர்வு- 12ம்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த தொழில் துறையினர் முடிவு...

published 1 year ago

மின் கட்டண உயர்வு- 12ம்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த தொழில் துறையினர் முடிவு...

கோவை: கோவையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் டாட் ஜேம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும்  என்பது பிரதான கோரிக்கை, இதில் கடந்த  90 நாட்களாக கிட்டத்தட்ட எட்டு கட்ட போராட்டம் நடத்தினோம்.இதில் தமிழக முதலமைச்சர்  கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து துறை அமைப்புகளுடன் சேர்ந்து நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகிறோம் அதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை 50% சதவீதத்தை நிறைவேற்றி தந்தனர்.

இதில் பீக்கவர் மின் கட்டணமாக, 
ரூபாய் 3500 மின் கட்டணமாக கட்டாயமாக வசூலிக்கப்பட்ட வருகின்றனர்.அந்த தொகையை தவிர்க்க வேண்டும் என்றும், அதே போன்று சோலார் மின் உற்பத்தியில் இருந்து விலக்கு அளிக்கவும், த்ரீ ஏ ஒன் என்ற மின் கட்டண விகிதாச்சாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.

கிரில் ரோக் வெல்டிங் தொழிலில்  12கிலோ வாட் மின்கட்டணத்திற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர் இதனை தவிர்க்கவும் வரும் டிசம்பர் 12ஆம்தேதி  மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.இந்த 38மாவட்ட தலை நகரில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.

நாட்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய்  வருவாய் தரும்  தொழில், 1.80லட்சம் தொழிலாளர்கள்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த மின் கட்டணத்தில் வருட வருவாயான ரூபாய் 2800 கோடி மின் கட்டணத்தொகையை திரும்ப பெற வேண்டும் .தமிழக அரசு விதித்த 
30 விதமான மின்  கட்டணம் மாற்றி அமைத்ததில் 
பிரதானமாக மிக முக்கியமானதான ஐந்து  கோரிக்கைகளான பீக்கவர் கட்டணம் அதற்கு மின் கட்டண  மீட்டர்களை வைக்க கூடாது.நிலைக்கட்டணம்,சோலார் உற்பத்தியில் சேவை கட்டணம்,மும்முனை மின் கட்டணத்தை திரும்ப வேண்டும்.

இதில் முதலமைச்சருக்கு எங்கள் கோரிக்கையை கொண்டு செல்லாமல் அதிகாரிகள் அதிகாரம் செய்கின்றனர்.தொழில் துறை உண்மையான கோரிக்கைகளை முன்னெடுத்து வரும் டிசம்பர் 12ம் தேதி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் நஞ்சப்பா சாலை, கிராஸ்கட் ரோடு பகுதியில் பெரிய அளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.அதற்கு காவல்துறை அனுமதியும் பெற்று உள்ளோம் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe