பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

published 1 year ago

பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

கோவை: பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் பிபிஜி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை என்றும் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களை இரண்டாம் ஆண்டிற்கான  கட்டணத்தை கட்டச்சொலி நிர்பந்தம் செய்வதாகவும், இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை முதலாம் ஆண்டிலேயே கட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், கட்டணம் கட்டத்தவறும் மாணவ மாணவிகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.50-300 வரை அபராதம் வசூலிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe