படைவீரர் கொடிநாள் நிதி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு...

published 1 year ago

படைவீரர் கொடிநாள் நிதி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு...

கோவை: இந்திய நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றி நமது தாயகத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் நாளான்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று படைவீரர் கொடிநாள் நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  வழங்கி தொடங்கிவைத்து, சிறப்பாக கொடிநாள் நிதிவசூல் பணியினை மேற்கொண்ட 9 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட முப்படை வாரிய உபதலைவர் லெப்டினன்ட் கர்ணல் சாரதி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் ரூபா சுப்புலட்சுமி. ஏர் காமெண்டர் விகாஸ்வாகி ஸ்டேஷன் காமெண்டர் கர்னல் ஸ்ரீதர்ராஜ், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் இப்ராஹிம் ஷெரீப் மற்றும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அன்று துவக்கிய படைவீரர் கொடிநாள் 2022 க்கான இலக்காக நம் மாவட்டத்திற்கு அரசு ரூ.1,98,00,000 நிர்ணயித்த நிலையில் 1,77,24,245/- வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர்
மாநகராட்சிக்கு படைவீரர் கொடிநாள் 2022-க்கான இலக்காக ரூ.46,00,000/-
நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 53,48,755/ வசூல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பாக கொடிநாள் நிதிவசூல் பணியினை மேற்கொண்ட 9 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கங்களையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறார்களை இராணுவப்பணிக்கு அனுப்பிய 2 பெற்றோர்களுக்கு வெள்ளிப்பதக்கங்களையும், முன்னாள் படைவீரரின் வாரிசுதாரர்களான பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் திருமண உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு ரூ.4000 மாதந்திர உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு ரூ.5000 தட்டச்சு பயிற்சி மானியமும், இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.1இலட்சம் வீதம் வீட்டுக் கடன் மானியத்தையும் என மொத்தம் ரூ.2.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe