2024கான ராசிபலன்கள்… யாருக்கெல்லாம் அடிக்கிறது ஜாக்பாட்…!

published 1 year ago

2024கான ராசிபலன்கள்… யாருக்கெல்லாம் அடிக்கிறது ஜாக்பாட்…!

கோவை: இன்னும் சில நாட்களில்  2023 முடிந்து 2024 புது வருடம் பிறக்கவுள்ளது.  நடப்பு ஆண்டான 2023இல் பல சோதனைகளைப் பலரும் கடந்து வந்திருக்கிறோம். பிறக்கப்போகும் 2024 ஆன புத்தாண்டில் பின்வரும் ராசிக்காரர்களுக்கு எப்படி, என்னென்ன பலன்களைத் தரப்போகிறது  என்பதனை பார்க்கலாம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வரும் வருடம் அவர்களின் தொழில், குடும்பம், பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் வருடமாக அமையப்போகிறது. தொழிலை பொருத்தவரயில் நல்ல ஒரு அதிகார பதவி உங்களை தேடிவரப்போகிறது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு அற்புதமான பதவியுயர்வு அதனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்,  உங்களின் பொருளாதார  நிலைமை டாப் கியரில் ஏறப்போகிறது. புது வீடு கட்டும் யோகமும், வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வரப்போகிறது,சச யோகம் கை கொடுக்கப்போகிறது. சொல்லும் செயலும் சிறப்பாக அமையப்போகிறது. குடும்பத்தில் நிலவிவந்த சங்கடங்கள் நீங்கி, மகிழ்ச்சி நிலவும். பெண்கள் தாங்கள் நினைத்த பொன் பொருட்களை இந்த ஆண்டு சேர்க்கக் கூடும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.. மேலும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கன்னி: வருகின்ற 2024 ஆம் ஆண்டு குரு பகவானின் அருளால் பொற்கால ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது. சனி பகவானால் நல்ல மாற்றம் ஏற்படப்போகிறது. உங்களின் குடும்பம், கடன், உடல் சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கப்போகிறது. புதிய முயற்சிகள் கைகூடும் சுபகாரியங்களின் செய்யத் தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்களின் பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ராகு கேதுவினால் பெரிய ராஜயோகம் தேடி வரப்போகிறது.

.துலாம்: சுக்கிர பகவானின்  அருள் உங்களுக்கு அபரிமிதமாகக் கிடைக்கப்போகிறது. ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு, உங்களுக்கு குரு பகவானைப் போலச் செயல்பட்டு  ராஜயோகத்தைத் தரப்போகிறார். பொருளாதாரம் மேம்படும். வருமானமும், வங்கி சேமிப்பும் உயரும். கடனாகக் கொடுத்த பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் கவனமாகச் செயல்படுங்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த 2024ஆம் ஆண்டு முதல் சுபகாரியம், திருமணத்திலிருந்த தடை நீங்கும். கூட்டுத் தொழிலில் நல்ல  லாபத்தைக் காணமுடியும். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. வேலை, தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, சொத்து வாகன வசதி வாய்ப்பு பெருகும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வீடு தேடி வரும் கடன்கள் அடைபடும். சேமிப்புகள் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.


 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe