நேரு கல்லூரியில் வானூர்தி கண்காட்சி

published 2 years ago

நேரு கல்லூரியில் வானூர்தி கண்காட்சி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: வானூர்தி இயங்கும் முறை, என்ஜின் செயல்பாடுகள், தொழில்நுட்ப இயக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வானூர்தி கண்காட்சி கோவையில் நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்படும் நேரு   விமானவியல் கல்லூரி சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக விமானங்கள் மற்றும் உலகூர்தி கண்காட்சி நடத்தபட்டு வருகிறது. கொரனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கண்காட்சி நடத்தப்படாமலிருந்த நிலையில் இவ்வாண்டு 14வது ஆண்டாக இக்கண்காட்சி " ஏரோ ஸ்பேஸ் 2022" நடத்தபட்டது. 

விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் விதமாகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விமானத்தில் செயல்பாடுகள், வானூர்தி இயங்கும் முறை, என்ஜின் செயல்பாடுகள், தொழில்நுட்ப இயக்கம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. 

24ம் தேதி துவங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் முதல் நாளிலே சுமார் 4000 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டனர். விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை மாணவ மாணவியர்களும் பொது மக்களும் தெரிந்துகொள்ளும்விதமாக இது அமைந்திருக்கின்றன. வானூர்தி என்ஜின் செயல்பாடுகள், தொழில் நுட்பம் , தற்ப்போதைய நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வானூர்தியின் இயங்குகின்ற விளக்கம் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. 

இக்கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் விதமாக பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 5 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக காட்சிபடுத்தபட்டுள்ளது. விமானவியல் துறையில் தொழில் நுட்ப வல்லுநர்களாக, விமானியாக பணியாற்ற இலக்காக கொண்ட மாணவர்களுக்கு விமானவியல் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற கண்காட்சி துவக்க நிகழ்வில் கோவை சூலூர் விமானப்படையின் 5 பிஆர்டி ஏர் ஆபீசர் கமாண்டிங், ஏர் கமாண்டர் கேஎஎ. சன்ஜீப், நேரு கல்வி குழுமங்களின் அரங்காவலர் கிருஷ்ணதாஸ், தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe