ஆனைமலையில் விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

published 1 year ago

ஆனைமலையில் விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்காலப் பிந்தைய கணக்கெடுக்கு பணி தொடங்கியுள்ளது.

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி  கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது. 

இதில் 62" நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் மாமிச உண்ணிகள் புலி சிறுத்தை, கருசிறுத்தை கால் தடங்கல், நக கீறல்கள், விலங்குகளின் எச்சகள் வைத்து கணக்கு எடுக்கும் பணியும்  மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதையில் காட்டுயானை, மான், பறவை, தாவர இனங்கள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும்.

இறுதியாக கணக்கெடுக்கும் பணி முடிவுற்று தேசியப் புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை  அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். வரும் 18ம் தேதி வரை கணெக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நவமலை பகுதியில் வனவர், வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe