கோவையில் தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டைகள் - VIDEO

published 1 year ago

கோவையில் தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டைகள் - VIDEO

கோவை: கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தெருநாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை அணிவித்து வருகின்றனர்.

கோவை மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் குறித்த கணெக்கெடுப்படு பணி சமீபத்தில் நடைபெற்று முடிந்து, நாய்கள் கருத்தடை மையமும் புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனாலும் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அங்கும் இங்குமாக ஓடித் திரியும் தெரு நாய்கள் மீது மோதும் வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.

இதனிடையே சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வருகின்றனர். 

இதன் மூலமாக இரவு  நேரங்களில் சாலைகளில் உலா வரும் நாய்களை சுலபமாக அடையாளம் காண முடியும் என்றும், இதன் மூலமாக தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 இந்த செய்திக்கான வீடியோவை பார்க்க பார்க்க லிங்கை கிளிக் செய்யவும் https://youtu.be/bJ-Ee39mWPA?si=h_p94RWNO3ZJBp_L

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe