கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி - துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல டி.ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர்...

published 1 year ago

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி - துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல டி.ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர்...

கோவை: புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்.

கோவையில் ஆண்டு தோறும் மிகப்பெரிய மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் 2023 எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும்  மேற்கு மண்டல டிஐஜி சரவண சுந்தர்,மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,துணை காவல் ஆணையர் சந்தீஸ்,ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்று ஓடினர்.

கோவை வ.உ.சி மைதனாம் அருகே துவங்கிய இதில் 21 கிலோ மீட்டர்,10,கிலோ மீட்டர், 5கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெறும் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe