ஆப் மூலம் முதலீடு செய்யக்கூறி கோவை மக்களுக்கு 'ஆப்பு'

published 1 year ago

ஆப் மூலம் முதலீடு செய்யக்கூறி கோவை மக்களுக்கு 'ஆப்பு'

கோவை: கோவையை சேர்ந்த வீரா, ரதீஷ், தீபக் உட்பட, 25-ற்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் ஆப் மூலம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் இவிகோ என்ற ஆப் பதிவிறக்கம் செய்தோம்.

அந்த ஆப்பில் ரூ.650 முதலீடு செய்தால், 37 நாட்களுக்கு நாள்தோறும் வட்டியாக ரூ.35 கிடைக்கும் என்றும், 37 நாட்கள் முடிவில் ரூ.650 பணம் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் முதலீடு செய்த பலர் அதில் கூறியப்படி நாள்தோறும் பணம் கிடைப்பதாக தெரிவித்தனர்.

இதுதவிர ஸ்மார்ட் சிட் பண்ட் என்ற திட்டத்தின் மூலம் ரூ.28,200 ஆயிரம் முதலீடு செய்தால், 7 நாட்களில் வட்டியுடன் சேர்த்து ரூ.62,400, மற்றொரு திட்டத்தில் ரூ.58,400 முதலீடு செய்தால், 7 நாட்களில் ரூ.1.23 லட்சம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பி நாங்கள் அந்த ஆப்பில் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தோம்.

இந்நிலையில் கடந்த, 7-ம் தேதி முதல் எங்களுக்கான பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த ஆப்பில் உள்ள வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, வங்கிகளுடன் பேசி வருவதாகவும், சில நாட்களுக்கு பின் முதலீடு பணத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். அதன் பின் அந்த ஆப் செயல்படவில்லை.

கோவை மாவட்டத்தில் மட்டும் அந்த ஆப் மூலம், 25 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளனர். அந்த ஆப்பில் நாடு முழுவதும், 7 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே பல கோடி ரூபாய் இதன்மூலம் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe