கோவை மக்களே டிசம்பர் 23ஆம் தேதி மாபெரும் ஷாப்பிங் திருவிழா-மிஸ் பண்ணிடாதீங்க...!

published 1 year ago

கோவை மக்களே டிசம்பர் 23ஆம் தேதி மாபெரும் ஷாப்பிங் திருவிழா-மிஸ் பண்ணிடாதீங்க...!

கோவை மக்களை மகிழ்விக்க வருகிறது கோயமுத்தூர்  ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 23ஆம் தேதி துவங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ள ஒவ்வொரு நாளும்  பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன..

கோவையில்,ஒவ்வொரு ஆண்டும் கொடிசியா சார்பாக அவினாசி சாலையில் உள்ள  கொடிசியா வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு  ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இதன் ஒண்பாதவது பதிப்பாக,கோவை உட்பட அதன் சுற்றுப்புற பகுதி மக்களின்   எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக வரும் 23 ந்தேதி துவங்கி ஜனவரி 1 ந்தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது..

இந்நிலையில், 
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள  கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் ராஜேந்திரன் கொடிசியா தலைவர் திருஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர்..

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பாதயிரம் சதுர அடியில்   நடைபெற உள்ள  இந்தக் கண்காட்சியில் சுமார் 80க்கும் மேற்பட்ட  நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்... கண்காட்சியில் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவருக்கும் மேஜிக் ஷோ,லைவ் பேண்ட்,இன்னிசை நிகழ்ச்சிகள், மிமிக்ரி என பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இந்தக் கண்காட்சி வீட்டு உபயோக சாதனங்கள், சூரிய ஒளி சாதனங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருட்கள் பர்னிச்சர்ஸ்,ஜவுளி வகைகள் ,கைவினைப் பொருட்கள்,சமையலறை பொருட்கள்,உணவு பொருட்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என தெரிவித்தனர்..

குறிப்பாக உணவக அரங்குகளில், அனைவரின் நாவிற்கும் ஏற்ற வகையில் பல்வேறு  விதமான சுவையான தின்பண்டங்கள் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் கொண்ட ஃபுட் கோர்ட் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe