கோவை நரசிபுரம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்ற காட்டு யானையால் பரபரப்பு... வீடியோ காட்சிகள்

published 1 year ago

கோவை நரசிபுரம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்ற காட்டு யானையால் பரபரப்பு... வீடியோ காட்சிகள்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், புல்லாக்காகவுண்டன் புதூர் பகுதியில் ஊருக்குள்ள புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை அருகே நரசிபுரம் மலைப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வரும் காட்டு யானைகள் மலையை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளை நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நரசிபுரம் அடுத்த புல்லக்காகவுண்டன் புதூர் பகுதியில் இரவு 8 மணி அளவில் புகுந்த ஒற்றை காட்டி யானை அப்பகுதியில் உலா வந்துள்ளது.  மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் யானை சுற்றி வந்ததால் பணிக்கு சென்று வீடு திரும்பியோர், கடைக்கு சென்றார் யானையை கண்டு ஓட்டம் பிடித்தனர்.

தகவல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

 

பின்னர் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். ஒற்றைக் காட்டி யானை ஊருக்குள் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்களை விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த செய்திக்காண வீடியோ https://youtu.be/xEmKSIaaq9c?si=tPtxP2OGdAVs9Sb0

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe