அமைச்சர் பொன்முடி வழக்கு- நீதித்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் வானதி சீனிவாசன்...

published 1 year ago

அமைச்சர் பொன்முடி வழக்கு- நீதித்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் வானதி சீனிவாசன்...

கோவை: கோவை மாவட்ட பாஜக சார்பில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு போர்வை, புடவை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தென் மாவட்டங்களுக்கு கோவை மாநகரில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் புடவை, போர்வை அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இங்கு இருந்து அனுப்புகின்றோம் எனவும்  அவர்களது வேதனையில் பங்கெடுக்க எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் பாரதிய ஜனதா கட்சி அதை முன் நின்று மக்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறது என்றார்.
வட இந்தியா வியாபாரிகள் இந்த பொருட்களை வழங்கி உள்ளனர் என தெரிவித்த அவர் மேலும் 1500 கிலோ அரிசி மூட்டைகளை சேகரித்து அதனை சேகரித்து அனுப்புகிறோம் என்றார். மேலும் வடக்கு கிழக்கு என பேசுகின்றவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், எனவும் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் கஷ்டப்படும் மக்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் உதவி செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றனர் எனவும் இவர்களது எண்ணத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரிவினை வாதமாக மக்களுடைய சிந்தனையை திசை திருப்பக் கூடாது என தெரிவித்தார்.

திமுக அமைச்சர் பொன்முடி தண்டனை குறித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி  சிறைக்கு சென்ற போது,  அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இலக்கா இல்லாமல் செந்தில் பாலாஜி நீடிக்கப்பட்டு உள்ளார் என கூறிய அவர் இது மிகப்பெரிய அவமானம் எனவும் தொடர்ச்சியாக இன்னொரு அமைச்சர் தண்டிக்கப்பட்டு உள்ளது, இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் இருந்தவர்களை நடவடிக்கை எடுத்து அவர்களை அனைவரும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு மாநிலத்தின் முதல்வர் நேர்மையாக ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாஜக, பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுக முக்கிய தலைவர்கள் அமைச்சர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஊழலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டு இருக்கிறோம் எனவும் நீதிமன்ற தீர்ப்பு அதனை உறுதி செய்து உள்ளதாக வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் இந்த வழக்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிபதி ஒரு மாத காலத்திற்குள் ஓய்வு பெறக் கூடிய நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பொன்முடி வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் வழக்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு உதவுகின்ற நீதித்துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு இந்த வழக்கு சரியான முன்னுதாரணம் என தெரிவித்தார்.

பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி அவரது வீட்டில் கர்நாடக காவலர்கள் விசாரணை குறித்த கேள்விக்கு - தி.மு.க கழகம் ஊழலின் மறுபடியும் அதிகார துஷ்பிரயோகம் என தெரிவித்த அவர் இன்று நேற்று அல்ல தி.மு.க பல்வேறு காலமாக செய்து வருகிறது எனவும்,  மத்தியில் நேர்மையான நிர்வாகம் நடந்து வருகிறது, தி.மு.க என்றாலே லஞ்சம் ஊழல் துஷ்பிரயோகம் என விமர்சித்தார்.


சென்னை எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கலந்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களோடு நாங்கள் இருக்கிறோம்,  வேண்டுமென்றே எண்ணெய்யை நிறுவனம் என்னை கசிய விட்டு அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுடைய பாதுகாப்பு மிக மிக முக்கியமானது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe