கோவையில் அனைத்து தேவாலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை...

published 1 year ago

கோவையில் அனைத்து தேவாலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை...

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து கோவையில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பாடல்களுடன் விழா துவங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம், போத்தனூர் புனித ஜோசப் தேவாலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், கோவைப்புதூர் குழந்தை ஏசு தேவாலயம், ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவாலயம், திருச்சி சாலை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், சவுரிபாளையம் இம்மானுவேல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe