கோவையில் இந்த வாரம் வானிலை எப்படி? எப்போது மழை?

published 1 year ago

கோவையில் இந்த வாரம் வானிலை எப்படி? எப்போது மழை?

கோவை: கோவையில் இந்த வாரம் வானிலை  நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறியுள்ளது.

கோவையில் கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை (26ம் தேதி) கோவையில் 21 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 27ம் தேதி 21 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

வரும் 28ம் தேதி 22 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 மற்றும் 30ம் தேதிகளிலும் இதே வானிலையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 31ம் தேதி 22 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக்கொள்ள அறிவிக்கப்படுகிறீர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe