கோவையில் பெட்ரோல்-டீசல் போட கடன் தராங்களாம்...!

published 1 year ago

கோவையில் பெட்ரோல்-டீசல் போட கடன் தராங்களாம்...!

கோவை: வாகனங்களை வாங்குவதற்கு பொதுவாக நிதி நிறுவனங்கள் கடன் உதவி செய்வது வாடிக்கை. இந்த நிலையில் கோவையில், வாகனங்கள் இயக்க தேவைப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை வாங்குவதற்காக கடன் உதவி செய்வதற்கு ஆரம்பித்திருக்கின்றனர்.

கோவை காளப்பட்டி பகுதியில் ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் சார்பாக புதிய கிளை ஒன்று ஆரம்பமானது. அங்குள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இந்த கிளை அமைக்கப்பட்டு இருக்கின்றது.

இதில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு நிரப்பப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு நிதி உதவி வழங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீராம் பைனான்ஸ் கம்பெனி நிர்வாகி சரவணகுமார் கூறுகையில், மக்களுக்கு கடன் வழங்குவதற்காக, துரித சேவையில் ஈடுபடும் முனைப்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் இணைந்து இங்கு புதிய கிளையை திறந்து இருக்கின்றோம்.

பைனான்ஸ் துறையில் புதுவிதமான முயற்சியை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.  நலிவடைந்த ஏழை, எளிய வாகன ஓட்டிகள் மற்றும் வாகன முதலாளிகளுக்கு, எரிபொருள் நிதியுதவி (ஆயில் ஃபைனான்ஸ்) வழங்குவதற்காக இந்த முயற்சியில் இறங்கி இருக்கின்றோம்.

இந்த பியூல் பினான்ஸ் ஆரம்பிப்பதற்கான நோக்கம், வாடகைக்கு அழைப்பு வந்தும், வாகனம் இயக்க எரிபொருள் இல்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் ஆரம்பித்திருக்கின்றோம். இதனால் வாடகைக்கு அழைப்பு வந்தும், வாகன ஓட்டுவதற்கான எரிபொருள் நிரப்ப பணம் கையில் இல்லாமல் இருப்பபர்களுக்கு, இந்த திட்டம் உதவும் வகையில் நடைமுறைபடுதியிருக்கின்றோம்.

இந்த ஃபியூல் ஃபைனான்ஸ் திட்டத்தின் அடிப்படையில், வாகன ஓட்டிகள் வாடகைக்குச் செல்லும் பொழுது, ஸ்ரீராம் பைனான்ஸ் இணைப்பில் உள்ள பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி செல்லலாம்.

பின்பு வாடகை தொகையை பெற்றுக்கொண்டு, மீண்டும் கிளையில் வந்து அந்த பணத்தை கட்டிவிடலாம். இதனால் வாடகை கிடைத்து எரிபொருள் நிரப்புவதற்கு பணமில்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள், முதலாளிகள் சுமை நீங்கும் .

ரிஜிஸ்டர் செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி தெரிவித்து, எரிபொருள் அடித்துச் செல்லும் வாகன ஓட்டிகள், அன்றைய தினம் மாலைக்குள் பணத்தை கட்டி விட்டால் வட்டி கிடையாது.

ஒரு நாளை கடந்தால், வாகன ஓட்டிகள் சிறிய வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் வாகன போட்டிகளின் குழந்தைகள் மற்றும் அரசாங்க பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றோம்.

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும்,  பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயூம் ஸ்காலர்ஷிப் வழங்கி வருகின்றோம். என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe