இளம்பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்தவர் கைது

published 2 years ago

இளம்பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்தவர் கைது

கோவை,ஜூலை.1- கோவை ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த 36 வயது இளம்பெண். ஐ.டி. ஊழியர். இவர் திருமணம் செய்வதற்காகத்  திருமண பதிவு இணையதளத்தில் பதிவு செய்து வைத்து இருந்தார். கடந்த மார்ச் 12-ந் தேதி இளம்பெண்ணை மார்க்கஸ் சிங் என்பவர் தொடர்பு கொண்டு திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண்ணை காதல் வசனங்கள் பேசி மார்க்கஸ் சிங் தனது காதல் வலையில் வீழ்த்தினார்.

அப்போது அவர் இளம்பெண்ணிடம் தனது தாயின் மருத்துவச் சிகிச்சைக்கு அவசரமாக ரூ.10 லட்சம் பணம் தேவைப்படுவதாகக் கூறினார். இதனையடுத்து இளம்பெண்  வங்கியில் இருந்து கடன் பெற்று மார்க்கஸ் சிங்கின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 10 லட்சம் பணத்தை அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர் மேலும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறினார். இதனையடுத்து இளம்பெண் தனது நகைகளை அடகு வந்து ரூ.9 லட்சம் பணத்தை அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட மார்க்கஸ் சிங் இளம்பெண்ணிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

 பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இளம்பெண் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.19 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த மார்க்கஸ் சிங்கை தேடி வருகிறார்கள். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe