கோவை பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது...

published 1 year ago

கோவை பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது...

கோவை: கோவை-பெங்களூரு இடையேயான தமிழ்நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயில் கோவையில் சேவை தொடங்கப்பட்டது.

கோவையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை அயோத்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.

இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை எம்பி நடராஜன், எம்.எல்.ஏ அம்மன் அர்சுணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த வந்தே பரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள்,பயணிகள் சென்றனர். இந்த ரயில் சேவை ஜனவரி 1-ம் தேதி முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத ரயில் கோவை, திருப்பூர்,ஈரோடு,சேலம், தர்மபுரி,ஓசூர்,பெங்களூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய எம்பி நடராஜன் இந்த வந்தே பாரத் ரயிலும் உதய் ரயிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால் உதய் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe