நீங்கள் பட்டம் பெற்றவரா..! ரூ.25,000/- ஊதியத்தில் வேலை…!

published 1 year ago

நீங்கள் பட்டம் பெற்றவரா..! ரூ.25,000/- ஊதியத்தில் வேலை…!

 

கோவை : அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Associate – I பணிக்கான காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே உள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கான விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.

காலிப்பணியிட எண்ணிக்கை: ஒன்று

பணிக்கான கல்வித் தகுதி:

·  இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s or Master’s Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·  விண்ணப்பதாரர்கள் Engineering -ல் CSE / IT / ECE பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் பார்வையிடவும்.

மாத ஊதிய விவரம்:

நேர்காணல் மூலம் செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.01.2024ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்த லிக்கை பயன்படுத்தி  இந்த வேலைக்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்  https://www.annauniv.edu/pdf/Advertisement%20and%20Application%20Form_SERB-SURE_PA-I_28.12.2023.pdf 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe