ஜொலித்த வாலாங்குளம்..! இன்னிக்கு ஒரே ஜாலிதான்...!

published 1 year ago

ஜொலித்த வாலாங்குளம்..! இன்னிக்கு ஒரே ஜாலிதான்...!

கோவை : புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 20 ஆயிரம் எல்இடி விளக்குகள் பொருந்திய லேசர் நிகழ்ச்சி சோதனை ஓட்டம் வாலாங்குளத்தில்  நேற்றிரவு நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. மேலும் பல இடங்களிலும் தொடர்ந்து கோவை மாநகரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் வாலாங்குளத்தில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மற்றும் டிரம்ப் அமைப்பின் சார்பாக சுமார் 20000 வண்ண விளக்குகள் பொருந்திய லேசர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதன் சோதனை ஓட்டமாக நேற்று வாலங்குளம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து லேசர் ஷோ நிகழ்ச்சி சோதனை ஓட்டமாக நடைபெற்றது.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாலத்தின் மீது நின்றவாறு கண்டு ரசித்தனர். இன்று மாலையில் இருந்து வாலாங்குளத்தில் நடைபெற உள்ள புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோல்கள் பறக்கவிடப்பட்டு நட்சத்திர வடிவில் மற்றும் ஹேப்பி நியூ இயர் வாசகங்கள் வடிவில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.

அதனை தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் குளத்தின் கரையில் நடைபெற உள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe