10 வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவரா..! தமிழ்நாடு சமூக நலன் துறையில் வேலைவாய்ப்பு!

published 1 year ago

10 வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவரா..! தமிழ்நாடு சமூக நலன் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின், சமூக நலத்துறையில் வழக்கு பணியாளர், பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய பணிகளுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும்  ஒருங்கிணைந்த சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்ர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

வழக்குப் பணியாளர்:  (Case worker)

காலிப்பணியிடங்கள் – 1

பணிக்கான தகுதி: சமூகப் பணியில்(Sociology), உளவியல் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும். 2 வருடத்திற்கு மேள் முன்அனுபவம் பெற்றிறுத்தல் அவசியம். பெண்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.

பன்முக உதவியாளர் (Multi-purpose Helper) காலிப்பணியிடங்கள் - 1

பணிக்கான தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக பணியில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர் பெண்ணாக இருத்தல் அவசியம். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.

பாதுகாவலர்-(Security)

காலிப்பணியிடங்கள் – 2

பணிக்கான தகுதி: விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 10வது தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர் 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு  பெண் அல்லது ஆண் பணியாளராக இருத்தல் அவசியம். மேலும் உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: உங்கள் தகுதிக்கு ஏற்ற  பதவிகளுக்கு  எனும் இணையத்தளத்தில் இருக்கும் விண்ணப்பதினை படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 31.01.2024 தேதிக்குள் முதல் தளம், பி பிளாக், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe