கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் விபத்துகள்

published 1 year ago

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் விபத்துகள்

கோவை: கோவை மாநகரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

கோவை வாலாங்குளத்தில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு லேசர் ஷோ, செண்ட மேளம், ஆங்காங்கே செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளை உற்சாகப்படுத்த பல்வேறு விளையாட்டுகளும், கண் கவர் கலை நிகழ்ச்சிகளும்  இடம்பெற்று இருந்தன.
ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் கொண்டாட்ட பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.  
மாநகரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள், இளைஞிகள், சிறுவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து ஆடி, பாடி கொண்டாடினர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக உற்சாகமாக கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் உற்சாக மிகுதியில் பைக்கில் வீலிங் செய்து அசத்தினர். இன்னும் சிலர் அதி வேகமாக பைக் ஓட்டி சென்றனர்.

அப்போது தவறி கீழே விழுந்து 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ''புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவித சம்பவம் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் மட்டும் 7 பேர் லேசான காயம் அடைந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களை பிடித்து எச்சரித்து போதை தெளிந்ததும் அனுப்பி வைக்கப்பட்டனர்.'' என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe