பறக்க ரெடியா இருங்க.. கோவையில் பலூன் திருவிழா தொடங்கப் போகுது மக்களே..

published 1 year ago

பறக்க ரெடியா இருங்க.. கோவையில் பலூன் திருவிழா தொடங்கப் போகுது மக்களே..

கோவை: கோவையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது.

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில்  பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவின் போது வெவ்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். மேலும், பொள்ளாச்சியின் அழகை கண்டுகளிக்கலாம்.

இதனிடையே நடப்பு ஆண்டுக்கான பலூன் திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை 6 நாட்கள் இந்த பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதில் 8க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வர வழைக்கப்படுகின்றன.

9வது ஆண்டாக நடைபெறும் இந்த பலூன் திருவிழா  பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது. வெப்ப காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு தலா ரூ.25,000 என்ற தொகை கடந்தாண்டு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த பலூன் திருவிழா, இந்தியாவிலேயே கோவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. இதில் பங்கேற்க தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருகின்றனர்.

பலூன் திருவிழா குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.tnibf.com/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe