கோவை அறிவு சார் நூலகத்தில் இடம் பெற்றிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றம்...

published 1 year ago

கோவை அறிவு சார் நூலகத்தில் இடம் பெற்றிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றம்...

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள  நூலகம் மற்றும் அறிவுசார் மையம், 20 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர் பாரம்பரிய சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

அறிவு சார் நூலகத்தில் புத்தகங்கள் வைக்கும் அலமாரியில் கோவையில் பாரம்பரிய சின்னங்கள், அடையாள சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் தளத்தில் உள்ள அலமாரியில் ஆதியோகி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை அரசு உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகம் நேற்று வலியுறுத்தியது. அகற்றாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அறிவுசார் மைத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தபெதிக நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe