மனிதனால் நுழைய முடியாத சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகம்..! எந்த நாட்டை சேர்ந்தவரும் நுழைய முடியவில்லையாம் - அது ஏன் தெரியுமா?

published 1 year ago

மனிதனால் நுழைய முடியாத சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகம்..! எந்த நாட்டை சேர்ந்தவரும் நுழைய முடியவில்லையாம் - அது ஏன் தெரியுமா?

மனிதனாகிய நாம், நாம் அறியாத பல விண்வெளி இரகசியங்கள் குறித்து பலவற்றை  ஆராய்ந்து அதற்குரிய காரணத்தை அறியும் காலகட்டத்தில் நாம் தற்போது இருக்கிறோம். பற்பல நாடுகளும் விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா உட்படப் பல நாடுகளாலும் தங்கள் விண்கலத்தை அனுப்ப முடியாத அளவில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

 ஆம், அது தான் சனி. சரி, எதனால் எந்த நாட்டினாலும்  சனி கிரகத்தில் மட்டும் யாராலும் தங்களது விண்கலத்தை தரையிறக்க முடியவில்லை என்று தெரியுமா? இதனைப் பற்றி நாம் இப்போது விரிவாகக் காண்போம். முன்னதாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் இன்று தனது இலக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனையை மேற்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

 

 நாம் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இந்த  பிரபஞ்சத்தில் வாழ்ந்து எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த விண்வெளி மிகப்பெரிய புதிர் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. என்ன தான் நாம் சூரியக் குடும்பத்தில் உள்ள பல கிரகங்களுக்கும் விண்கலத்தை அனுப்பி, அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், சூரிய மண்டலத்தின் ஆறாவது கிரகமான சனியில் மட்டும் எந்த நாட்டினாலும் தரையிறங்க முடியவில்லை. நம் சூரியக் குடும்ப கிரகங்களில் செவ்வாய்க்  கிரகம் ஒரு மிகப்பெரிய சிவப்பு நிற கிரகமாகும். ஆனால் அப்படிப்பட்ட செவ்வாயிலேயே மனிதனால் நுழைய முடிந்தது, ஆனால் சனி கிரகத்தில் மட்டும் நம்மால் நுழைய முடியவில்லை. எதனால் என்று தெரியுமா?

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் சனி கிரகம் முற்றிலுமாக ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனதாகும். மேலும் சனி கிரகத்தில் அம்மோனியா, நீர், மீத்தேன் போன்றவற்றின் கலவையும் கூட இருக்கின்றன.  நாம் சனி கிரகத்திற்குள்  நுழைய முற்பட்டால் அங்குள்ள வாயுக்கள் அந்த அழுத்தத்தின்  காரணமாகத் திரவமாக மாறக்கூடுமாம். அதுமட்டுமின்றி  மற்றொரு காரணம் அதன் அழுத்தம் மற்றும் வெப்பநிலையும் ஆகும்.

பொதுவாகப் பூமியின் வளிமண்டல அழுத்தம் 1 பார் எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால் சனி கிரகத்தின் வளிமண்டல அழுத்தம் 1 மில்லியன் பார் என்று கணக்கிடப்படுகின்றது. இந்த நிலையில் இங்கு மனிதன் சென்றால், கொதித்துப் போவான் என அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் சனி கிரகத்தின் ஆரம் தோறாயமாக 58,232 கிமீ ஆகும். இது நம் பூமியைக் காட்டிலும் 9 மடங்கு அகலம் கொண்டது. இந்த கிரகத்தில் ஒரு நாளானது 10.7 மணிநேரம் மட்டுமே நீடிக்கும். இது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலும் இரண்டாவது குறுகிய நாளைக் கொண்ட கிரகமாகும். சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர 29.4 பூமி ஆண்டுகள் ஆகும்.

 

மேலும் சூரியக் குடும்பத்திலேயே மற்ற கிரகங்களை விடச் சனி தான் அதிக நிலவுகளை கொண்டுள்ளது. முக்கியமாகச் சனி கிரகத்தின் தனித்துவமான விஷம், அதன் வளையங்கள் தான். இந்த வளையங்கள் வால்மீன்கள், சிறு கோள்கள் மற்றும் சிதைந்த நிலவுகளால் ஆனதாக கூறபடுகிறது.


 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe