இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு மிரட்டல், தீவிர சோதனையில் இந்திய அறிவியல் மையங்கள்…!

published 1 year ago

இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு மிரட்டல், தீவிர சோதனையில் இந்திய அறிவியல் மையங்கள்…!

கோவை: அறிவியல் துறையில் நம் இந்தியா இன்று வரலாறு படைத்த நிலையில், இந்திய நாடு முழுவதும் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், திருநெல்வேலி அறிவியல் மையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 சூரியனை ஆய்வு செய்வதற்காகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று இந்தியா சார்பில் ஆதித்யா எல்1 எனும் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் 127 நாட்கள் பயணத்திற்குப் பின்னர் இன்று எல் 1 என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய அறிவியல் துறைக்கு 6ம் தேதி மிகமுக்கியமான நாளாகக் கருதப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் நம் நாட்டு மக்கள் மற்றும் அறிவியல் துறையினர் திழைத்து கொண்டிருக்கும்  நிலையில், மர்ம நபர்களால் நாடு முழுவதும் இருக்கின்ற அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்திற்கு 6ம் தேதி காலை வந்த மின்னஞ்சல் ஒன்று வந்திருந்த நிலையில் அதில் வெடிகுண்டு குறித்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 26 அறிவியல் மையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த காரணத்தினால் இந்தியாவில் உள்ள அனைத்து அறிவியல் மையங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. இதிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் தீவிர ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe