தில்லாலங்கடி திட்டம் தீட்டிய சீனா…! செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் வெளிவந்த உண்மை..!

published 1 year ago

தில்லாலங்கடி திட்டம் தீட்டிய சீனா…! செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் வெளிவந்த உண்மை..!

கோவை: பூட்டான் நாட்டின்  வடகிழக்கு பகுதியைச் சீனா ஆக்கிரமித்து இந்தியாவிற்கு  ஊடுருவத்  திட்டமிட்டு வ ருவது செயற்கைக்கோள்  அனுப்பிய புகைப்படங்கள்  மூலம்  தெரியவந்துள்ளது.

அமெரிக்காவுடன் எப்பொழுதும் மோதலிலிருந்து வரும் சீனா, ஆசியாவில் மாபெரும் வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன்  இருந்து வருகிறது சீனா.

அதுமட்டுமின்றி  தெற்காசிய நாடுகள் சிலவற்றைத்  தனது கட்டுபாடுக்குள்  வைத்திருக்கும்  சீனாவிற்கு நமது இந்திய நாடு கடும் சவாலாக இருந்து வருகிறது.

சீனாவின் முயற்சி

இந்த நிலையில்,  சீனா தெற்காசிய நாடுகளில் ஒன்றான பூட்டானில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

சீனா, பூட்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக ஊடுருவ தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருவது இந்த புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

சீனாவின் நோக்கம்

இந்த செயற்கைக் கோள் படங்களில் மூலம் பூட்டான் நாட்டின் கேன பஜோங் பிராந்தியத்தில் பேயில் ஆற்றின் பள்ளத்தாக்கில்  குடியிருப்புகளைச் சீனா அமைத்து வருகின்ற தெள்ளத் தெளிவான படங்கள்  வெளியாகியுள்ளன.

அத்தோடு, கிட்டதட்ட 8 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்ற பூட்டானை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவுக்குப் பூகோள ரீதியாக நெருக்கடி கொடுக்க சீனா முயற்சிப்பதாக சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe