"தளபதி 66" திரைபடத்தை சென்னையில் படமாக்க நடிகர் விஜய் வேண்டுகோள்.

published 2 years ago

"தளபதி 66" திரைபடத்தை சென்னையில் படமாக்க நடிகர் விஜய் வேண்டுகோள்.

FEFSI ஊழியர்களுக்காக "தளபதி 66" திரைபடத்தை சென்னையில் படமாக்க நடிகர் விஜய் வேண்டுகோள்..! 

பெப்சி ஊழியர்கள் பலனடையும் வகையில், ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தவேண்டும் என்று படக்குழுவை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. கடந்த 13-ம் தேதி வெளியான இந்தப் படம், எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவந்தாலும், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து/நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தை/பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 66’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது.இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளநிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பெப்சி (FEFSI) ஊழியர்கள்/பலன் அடையும் வகையில்/சென்னையில் படப்பிடிப்பு நடத்துமாறு நடிகர் விஜய் படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 சதவிகித படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்ட நிலையில் விஜய் கேட்டுக்கொண்டதால் சென்னையில் இருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும் மீதமுள்ள காட்சிகளை பிற மாநிலங்களிலும் படமாக்க உள்ளனர்.விஜய்யின் இந்த செயல் குறித்து அறிந்த ரசிகர்களும், பெப்சி ஊழியர்களும் அவரை பாராட்டு வருகின்றனர்.விஜயின் இந்த செயலால் சுமார் 100 முதல் 200 ஊழியர்கள் வரை பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

‘தளபதி 66’ படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.தமன் இசையமைக்கிறார்.இதற்கிடையில் இந்தப் படத்தில் நடிகர் மோகன் விஜயின் அண்ணனாக நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe