பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ-மாணவிகள்

published 1 year ago

பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ-மாணவிகள்

கோவை: சேரன் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

கோவை பேரூர்  பகுதியில் உள்ள சேரன் கல்வி குழுமங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  இதன் ஒரு பகுதியாக கிராமிய பொங்கல் 2024 எனும் தலைப்பில் எஸ்.எம்.எஸ்.  கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழ் பாரம்பரிய முறையில்  உற்சாகமாக நடைபெற்ற. நிகழ்ச்சியில் பாரம்பரிய உடை அணிந்த மாணவ,மாணவியர் நவ தானிய பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்..  தொடர்ந்து கிராமிய நடனத்துடன் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் பறையாட்டம் ,சிலம்பாட்டம், கோலப்போட்டி கயிறு இழுத்தல், உறியடித்தல், கிராமியச் சந்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழர் மரபைப் போற்றும் வகையில்  நடைபெற்றன. 

இவ்விழாவின் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சேரன் கல்வி குழுமங்கள் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

இவ்விழாவில் சேரன் கல்வி குழுமங்களின் அனைத்து கல்லூரி முதல்வர்கள்,  துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,ஊழியர்கள்  மற்றும் மாணவ மாணவியர் என பலர் கலந்து கொண்டு உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe